நாளை (மே 05) நள்ளிரவு 12 மணி முதல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட புகையிரத தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
மக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்காமல் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பணிபுறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவாகவே தமது தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.