பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஜூன் மாதம் முதல் 50% செலவைக் குறைக்க பிரதமர் அலுவலகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, பிரதமர் அலுவலகத்தின் செயற்பாடுகள் குறைந்த அளவிலான ஊழியர்கள் மற்றும் வளங்களுடன் இயங்கும் என பிரதமரின் செயலாளர் சமன் எக்கநாயக்க தெரிவித்தார்.
அத்தோடு ஏனைய அரச நிறுவனத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டிருந்த 26 ஊழியர்களும் அந்தந்த நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஏனைய அரச நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட 16 வாகனங்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
இதனை முன்னுதாரணமாக கொண்டு ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் அமைச்சுக்களின் செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.