இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப தாம் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்கள் தலைமையிலான அரசாங்கத்தின் ஆணை முடிந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டை ஸ்திரப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கும் புதிய அரசாங்கத்தை நியமிப்பதற்கும் பங்களிக்க தயாராகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கு எதிராக யாராவது நாடாளுமன்றத்தில் சதிகளை மேற்கொள்வார்களானால் அது தேசத் துரோகச் செயலாகும் எனவும் குற்றம் சாட்டினார்.

அத்தோடு நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap