இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் ஐ.ஓ.சி. நிறுவனதிற்கான எரிபொருள் விலை சூத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படடவுள்ளது.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் நட்டத்தை குறைக்கும் வகையில் எரிபொருள் விலை சூத்திரம் முன்வைக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று கருத்து தெரிவித்த அவர், விலை சூத்திரம் மொத்த இழப்பை ஈடுகட்டுவதற்காக மட்டும் முன்வைக்கப்படவில்லை என அவர் கூறினார்.

கடைசியாக எரிபொருள் விலை உயர்த்தப்பட்டபோது டாலர் மதிப்பு 330 ஆக இருந்தது, அது இன்று 360 ஆக உயர்ந்துள்ளது இருப்பினும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையவில்லை என தெரிவித்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மாதாந்தம் எரிபொருளை இறக்குமதி செய்ய 120 மில்லியன் டொலர்களை மட்டுமே செலவிட்ட நிலையில் 585 மில்லியன் டொலர்கள் செலவாகும் என மதிப்பிட்டுள்ளதாக கூறினார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap