தன்னிச்சையான மற்றும் மோசடி நடவடிக்கைகளை நிறுத்துங்கள் – சஜித் காட்டம்
1 min read
சர்வஜன வாக்கெடுப்பு இன்றி அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை தாங்கள் விரும்பியவாறு கொண்டுவர இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கவும், 19 ஆவது திருத்தத்தை வலுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு 20 ஆவது திருத்தத்தை இரத்து செய்யவும், ஆணைக்குழுக்களை சுயாதீனமாக்கும் முயற்சிகளையும் அரசாங்கம் கைவிட கூடாது என எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நேற்று (23) சமூக வலைதளத்தில் காணொளி ஒன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ள அவர், அரசாங்கத்தின் மோசடி நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.