ஒரு கிழமைக்கு பின்னர் எரிவாயு சிலிண்டர்கள் இன்று (31) சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் கூறியுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தினமும் 50,000 எரிவாயு சிலிண்டர்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த நேரத்தில் கப்பல் வராத காரணத்தினால் கடந்த செவ்வாய்கிழமை முதல் லிட்ரோவினால் எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
3,950 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிச் செல்லும் கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்ததுடன், இறக்கும் பணிகள் பிற்பகல் ஆரம்பிக்கப்பட்டதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று முதல் சந்தைக்கு எரிவாயு விநியோகிக்கப்படும் என்றும் நாளாந்தம் விநியோகிக்கப்படும் எரிவாயுவில் 30,000 எரிவாயு சிலிண்டர்கள் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.