எரிபொருள் விலை குறைப்பு – புதிய விலை விபரம் இதோ
1 min read
இன்று இரவு 10 மணிமுதல் அமுலாகும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை குறைத்துள்ளது.
அதன்படி பெட்ரோல் 92 ஒக்டேன் விலை 20 ரூபாயினால் குறைக்கப்பட்டு இன்று முதல் 450 ரூபாயாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் 95 ஒக்டேன் 10 ரூபாயினால் குறைக்கப்பட்டு 540 ரூபாயாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டீசல் 10 ரூபாயினால் குறைக்கப்பட்டு 440 ரூபாயாகவும் சூப்பர் டீசல் 10 ரூபாயினால் குறைக்கப்பட்டு 510 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.
புதிய எரிபொருள் பாஸ் முறையின்படி ஜூலை 21 முதல் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.