கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலக நுழைவாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருபவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து பிரதான நுழைவாயில்களையும் மறித்து நேற்று நள்ளிரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக படையினர் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட கோட்டா கோ கம போராட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதனையடுத்து, போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, போராட்டக்காரர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap