நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸாரால் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் முடிவெடுப்பதற்காக சபாநாயகரை உடனடியாக நாடாளுமன்றத்திற்கு அழைக்குமாறு ஹரின் பெர்னாண்டோ கோரிக்கை விடுத்தார்.
அத்தியாவசிய உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தைக் கூட்டி, நம்பிக்கையில்லாப் பிரேரணையை எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனால் சபை நடவடிக்கையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதை அடுத்து நாடாளுமன்ற நடவடிக்கை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.