கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்தில் நேற்று இரவு நேர புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்ட காரணத்தினால் அங்கு பதற்றமான சூழல் காணப்பட்டது.
இதனால் பல பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டதாகவும் ஒருசிலர் கோபத்தோடு நடந்து கொண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து பொலிஸாரின் தலையீட்டினை அடுத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் பயணிகள் ஏற்றிச் செல்லப்பட்டனர்.