கட்சித் தலைவர்களுக்கு இடையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக எந்த பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவில்லை.

ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் வருகையுடன் இறுதிக் கூட்டத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (3) நடாத்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

21ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (27) பிரதமரின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap