ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவை வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
நாளை நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதிக்கான தெரிவில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து கலந்துரையாட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு இன்று கூடியது.
இதன்போது பேராசிரியர் ஜி.எல். பீரீஸ் மற்றும் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடும் டலஸ் அழகப்பெரும ஆகியோரும் கலந்துரையாடியிருந்தனர்.
இந்நிலையிலேயே டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவை வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளடாக அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.