இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள படம் ‘பொம்மை’. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் ‘பொம்மை’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விறுவிறுப்பாக இடம்பெற்றிருக்கும் இந்த டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap