Tag: கோட்டாபய ராஜபக்ஷ

பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதிக்கு எடுத்துரைத்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. ஒருவாரம் இலங்கையில் தங்கியிருந்த குறித்த பிரதிநிதிகள் குழு, ஊழியர் மட்ட உடன்பாட்டை எட்டுவதற்கு கொள்கைப் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்தது. பிரதமர், நிதியமைச்சு, இலங்கை…

நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினர்: ஜனாதிபதி உத்தரவு

நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார். பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின் 40 ஆவது அதிகாரத்திற்கு அமைவாகவே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பாக சபாநாயகர்…

தோல்வியடைந்த ஜனாதிபதியாக என்னால் வெளியேற முடியாது: வருடங்களும் இருப்பேன் – ஜனாதிபதி விடாப்பிடி

தோல்வியடைந்த ஜனாதிபதியாக தன்னால் வெளியேற முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். போராட்டங்களை நடத்தி தன்னை பதவி விலகுமாறு அழைப்பு விடுத்த போதிலும் எஞ்சிய பதவிக் காலத்தில் இரண்டு வருடங்களையும் முடிக்கப்போவதாக அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) வெளிநாட்டு…

மஹிந்தவை விலக கூறியதே வாழ்வில் கடினமான மற்றும் வேதனையான தீர்மானம் : ஜனாதிபதி உருக்கம்

மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரியதே தனது வாழ்க்கையில் எடுத்த மிகவும் கடினமான மற்றும் வேதனையான தீர்மானம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுவுடனான சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர், நாட்டை நினைத்துதான் இவ்வாறான…

பதில் நிதிமையச்சராக ஜனாதிபதி கோட்டா நியமனம் – அரசாங்கம்

புதிய நிதி அமைச்சர் தொடர்பான முடிவுகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே எடுப்பர் என அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போது பதில் நிதிமையச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்படுகின்றார் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்…

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேக நபர்களை உடன் கைது செய்யுங்கள் !

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்தேக நபர்களை கைது செய்யுமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஜனாதிபதி மற்றும் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய குழுவினருக்கு எதிராக…

இன்று மாலை பிரதமராக பதவிப் பிரமாணம் செய்கின்றார் ரணில் – முக்கிய தகவல் வெளியானது

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இன்று மாலை 6.30 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து…

பிரதமர் பதவியை ஏற்கும்படி பொன்சேகாவையும் தொடர்பு கொண்டார் ஜனாதிபதி கோட்டா!

பிரதமர் பதவியை ஏற்பது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இடைக்கால அரசாங்கம் அமைப்பது குறித்து கட்சிகளுக்கு இடையில் இணக்கம் காணப்படாத நிலையில், தற்போதைய அரசியல் முட்டுக்கட்டையை நீக்கும்…

ரணிலை சந்தித்தார் ஜனாதிபதி கோட்டா !!

முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதி தற்போது கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாசகார முயற்சிகளை நிறுத்துங்கள் – ஜனாதிபதி அதிரடி உத்தரவு

இன மற்றும் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் நாசகார முயற்சிகளை நிறுத்துமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை வெற்றிகொள்வதற்கு அனைத்து இலங்கையர்களும் கைகோர்க்க வேண்டிய தருணம் என்றும் அவர் கூறியுள்ளார். டுவிட்டரில்…

பொதுமக்களுக்கு ஜனாதிபதி கோட்டா விடுத்த முக்கிய கோரிக்கை !

பொதுமக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் பலவேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன. இந்நிலையில் வன்முறைகளில் ஈடுபடாமல் பொதுமக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என…

15 பேரடங்கிய சர்வகட்சி அரசாங்கம் : ஜனாதிபதி இணக்கம் என்கின்றார் ஓமல்பே சோபித தேரர்

15 பேரடங்கிய சர்வகட்சி அரசாங்கத்தை நியமித்து அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க பதவிகளை ஏற்குமாறு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தை உடன் – கூட்டுங்கள் ஜனாதிபதியிடம் சபாநாயகர் !

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் வன்முறைகளை கருத்திற் கொண்டு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். மே 17ஆம் திகதி நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றும்…

அரசியல் கட்சிகளை சாராத ஒருவர் புதிய பிரதமர்…! அவசரமாக அனைத்துக்கட்சிகள் கூட்டத்திற்கு ஜனாதிபதி கோட்டா அழைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை காலை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து, வெற்றிடமாக உள்ள பிரதமர் பதவிக்கு அரசியல் கட்சிகளை சாராத ஒருவர் நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை…

பிரதமர் பதவியை ஏற்று இடைக்கால அரசாங்கத்தை அமையுங்கள் – ஜனாதிபதியின் கோரிக்கை நிராகரிப்பு

பிரதமர் பதவியை ஏற்று இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளார். இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று உறுதிப்படுத்தியுள்ளார். தற்போதைய நெருக்கடி மத்தியில் பிரதமர் பதவியை ஏற்குமாறு…

அவசரகால பிரகடனத்திற்கு ஜீவன் தொண்டமான் கண்டனம் !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அவசரகால பிரகடனத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான் கண்டனம் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் தீர்வைக்கோரி மக்கள் வீதியில் இறங்கி போராடிவரும் நிலையில் அவசரச் சட்டம் பிறப்பிப்பது தீர்வாகாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சூழலில் அரசியல் ஸ்திரத்தன்மை…

ஜனாதிபதிக்கு எதிராக எந்தப்பிரேரணையை கொண்டுவந்தாலும் ஆதரவில்லை – வாசு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்வைக்கப்படும் எந்தவொரு பிரேரணைக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என வாசுதேவ நாணயக்கார அறிவித்துள்ளார். அத்தோடு ஜனாதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை அர்த்தமற்றதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். கட்சி பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்…

பிரதமரை நீக்கிய பின்னரே சர்வகட்சி அரசாங்கம் – ஆளும்கட்சி இணக்கம்

அமைச்சரவை மற்றும் பிரதமரை நீக்கிய பின்னரே சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் நாடளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார். 11 சுயாதீன அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் மேலும்…

ஜனாதிபதி கோட்டாவின் ஆலோசகர் 8 ஆம் தரத்தில் கூட சித்தியடையவில்லை – தயாசிறி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தவறான ஆலோசகர்களை தெரிவு செய்தமையினால் நாடு நெருக்கடி நிலைக்கு சென்றது என சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்ச தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். குருநாகலில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர், ஜனாதிபதியின் ஆலோசகர்களாக எட்டாம்…

ஜனாதிபதி கோட்டா தலைமையில் இன்று விசேட கலந்துரையாடல் !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று (02) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்தவர்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து சுயாதீன நாடாளுமன்ற…

அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி அழைப்பு

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் பங்காற்றலுடன் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இன்று (29) தம்மைச் சந்தித்த சுயஈன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிலிருந்து 5 பேரை இடைக்கால அரசாங்கத்தில் நியமிக்கவும் அவர் தீர்மானித்துள்ளார்…

பிரதமருக்கு 117 பேர் ஆதரவு உறுதியானது: அனைத்து கட்சிகளுடனான சந்திப்பு பிற்போடப்பட்டது

ஜனாதிபதி மாளிகையில் இன்று (29) முற்பகல் நடைபெறவிருந்த அனைத்து கட்சிகளுடனான சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில் சுயாதீனமாக செயற்பட்ட குழுவுடன் மாத்திரம் ஜனாதிபதி இன்று கூடி கலந்துரையாடவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வகட்சி அரசாங்கம் குறித்து கலந்துரையாடும் வகையில் இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு…

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கொள்கையளவில் இணக்கம்

அனைத்துக் கட்சிகள் அடங்கிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு கொள்கையளவில் இணக்கம் தெரிவிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். எனவே புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து ஆலோசிக்க, எதிர்வரும் வெள்ளிக்கிழமை விசேட கூட்டம் நடைபெற…

புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று மாலை !!

புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை இடம்பெறவுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்க பிரதமர் தீர்மானித்துள்ளார். இந்நிலையில் அதற்கான பிரேரணை இன்று (25) இடம்பெறவுள்ள…

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் நீயா நானா போட்டி..!

நிறைவேற்று அதிகாரத்தை பறிக்கும் 19 வது திருத்தம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு மீண்டும் அதிகாரங்களை வழங்கும் நடவடிக்கைகளுக்கு இடையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் ஒரு இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. குறித்த விடயம் தொடர்பாக ஆளும்கட்சி மற்றும்…