ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அரசாங்கத்தின் மிகுதி அமைச்சர்கள் 09 பேர் இன்று பதவியேற்றனர்.

அதன்படி புதிய அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளார்.

முன்னதாக கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை விமர்சித்ததை அடுத்து கல்வி இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்தவிற்கு மீண்டும் அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த அரசாங்கத்திலும் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் அதே அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

சுசில் பிரேமஜயந்த – கல்வி
விஜேதாச ராஜபக்ஷ – நீதி
திரான் அலஸ் – பொது பாதுகாப்பு
ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலா
மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு
கெஹலிய ரம்புக்வெல்ல – சுகாதாரம்
ரமேஷ் பத்திரன – பெருந்தோட்ட கைத்தொழில்
நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், கடற்படை மற்றும் விமான சேவைகள்
நளின் பெர்னாண்டோ – வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு

முழுமையான தகவல்களுக்கு தொடர்ந்தும் முகநூலில் @CBCTAMIL இணைந்திருங்கள்

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap