மிரிஹான பிரதேசத்தில் கடந்த மார்ச் 31ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தின் போது பேருந்துக்கு தீ வைத்த சந்தேகநபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (19) கைது செய்துள்ளனர்.

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றது.

சந்தேக நபர் தெரணியகல பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் கங்கொடவில, விஜேராம பிரதேசத்தில் உள்ள தனியார் கார் உதிரிபாகங்கள் நிறுவனமொன்றில் பணிபுரியும் 42 வயதுடைய நபர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap