புதிய அரசாங்கத்தின் மிகுதி அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த சுசில் பிரேமஜந்த மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரும் இன்று அமைச்சுப்பதவிகளை ஏற்பார்களா என அறியமுடிகின்றது.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரும் அமைச்சுப்பதவியை ஏற்றுக்கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் புதிய அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவியையும் பெறமாட்டோம் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்த போதும் அக்கட்சியில் இருந்து இரண்டு உறுப்பினர்கள் இன்று அமைச்சரவையில் இணையவுள்ளனர்.

நீதி மற்றும் சட்டம் ஒழுங்கு போன்ற அமைச்சு பதவிகள் ஆளும்கட்சிக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தோடு 25 இராஜாங்க அமைச்சுக்களை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap