துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பை வழங்கியிருந்தார்.
இதனை எதிர்த்து ஹிருணிகா மற்றும் அவரது தாயாரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அத்தோடு துமிந்த சில்வாவிற்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள அதேவேளை கடவுச்சீட்டை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் இன்று (31) உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், துமிந்த சில்வா நாட்டை விட்டு வெளியேறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இருப்பினும் அவர் மீண்டும் நாடு திரும்பியுள்ளாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.