இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று இன்று இலங்கைக்கு வரவுள்ளது.
இந்த கப்பல் இன்று பிற்பகல் சென்னையில் இருந்து இலங்கைக்கு புறப்பட உள்ளதாக இந்திய ஊடகங்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட அரிசி, பால்மா மற்றும் அத்தியாவசிய மருந்துகள் என்பனவே இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.