பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2வது பிரிவின் கீழ் இலங்கையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் இலங்கை முழுவதும் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு, ஒழுங்கு மற்றும் அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுதல் ஆகியவற்றின் நலன்களுக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.