ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யப்பா அபேவர்தனவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

சிங்கப்பூரை அடைந்துள்ள நிலையில் தனது செயலாளருக்கு இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வது தொடர்பான கடிதம் சபாநாயகர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் ஊடாக கிடைத்துள்ளது.

கடிதத்தின் செல்லுபடித்தன்மையை உறுதி செய்த பின்னர், அது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது

இதேநேரம் மாலைதீவு ஜனாதிபதியும் கோட்டாபய ராஜபக்ஷ இராஜினாமா செய்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் பயணித்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு வந்துள்ளார் என சிங்கப்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான போராட்டங்களை மேற்கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap