பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸிற்காக 365 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனை தொடர்ந்து இலங்கை அணி 506 பெற்றதோடு பதிலுக்கு இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த பங்களாதேஷ் அணி 169 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் ஓஷத பெர்னாண்டோ முதலாவது இன்னிஸில் 4 விக்கெட்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களையும் வீழ்த்தினார்.