ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழு நாளை (14) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் காலை 9 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் இடம்பெறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுவின் முதலாவது கூட்டம் இதுவாகும்.
இதேவேளை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதற்கு நாடாளுமன்றத்தில் தம்மை சுயாதீனமாக அறிவித்த 10 அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன.