தனியார் எரிபொருள் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் முன்னெடுத்திருந்த வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்குள் கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்கப்ப்டும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் உறுதியளித்துள்ளார்.

இன்று நாடளாவிய ரீதியில் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

தனியார் பெற்றோலிய பௌசர் உரிமையாளர்கள் சங்கம் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கையினால் நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக பல இடங்களில் எரிபொருள் கிடைகாதமை காரணமாக காலை முதல் தொடர்ந்தும் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

எனவே போராட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில் எரிபொருள் போக்குவரத்து விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap