இலங்கையின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு சற்றுமுன்னர் நிறைவடைந்துள்ளது.
அதன்படி 223 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தபோதும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வாக்குபதிவில் 04 வாக்குகள் செல்லுபடியற்ற வாக்குகளாக செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.