கடனைத் திருப்பிச் செலுத்தும் நடவடிக்கையை மீண்டும் தொடங்குவதற்கு நாட்டுக்கு குறைந்தது ஆறு மாதங்கள் தேவைப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், வெளிநாட்டுக் கடனை வழங்கும் வரையில் கடன் சேவை வழங்கப்பட மாட்டாது என ஆளுநர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கடனை மறுசீரமைப்பதற்கான திட்டங்களை மத்திய வங்கி கிட்டத்தட்ட இறுதி செய்துள்ளதாகவும், விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கடந்த வாரம் நாட்டில் நிலவும் அமைதியின்மை மற்றும் நிதியமைச்சர் ஒருவரை நியமிக்காமல் இருப்பதனால் கடன் வழங்குபவர்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்கள் தாமதமாகலாம் என்றார்.

இதேவேளை, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு தான் தொடர்ந்தும் ஆளுநரின் பதவியில் நீடிப்பதாக கலாநிதி வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த முடியாவிட்டால் பதவியில் இருந்து விலகுவதாக ஆளுநர் அண்மையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (CBCTAMIL)

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap