தேசிய பாதுகாப்பு இலக்குகளை அடைவதற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் விரிவான பாதுகாப்புக் கொள்கை அவசியம் என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இணையம் மற்றும் தகவல் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களின் போக்கு இலங்கையில் அதிகரித்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டினார்.
உள்நாட்டு போர் அதன் பின்னர் கொரோனா தொற்று என அனைத்து பிரச்சினையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொறிமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கூறினார்.