எதிர்காலத்தில் இலங்கை கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளப் போவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.
ஆகவே அரசாங்கம், உணவு மற்றும் விவசாய அமைப்பு, யுனிசெப், யு.என்.எஃப்.பி, உலக உணவுத் திட்டம் ஆகியவற்றை உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், அவசர மருந்து தட்டுப்பாடு குறித்து நிதியமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஏற்கனவே மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையால் பல அறுவை சிகிச்சைகள் தாமதமாகி வருவதாகவும் இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.