எரிபொருள் இருப்புக்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடம் மேலும் 200 மில்லியன் டொலர்கள் கடனை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது.

இருப்பினும் மேலும் 500 மில்லியன் டொலர் கடனை கோருவது தொடர்பாக கொழும்பு புதுடெல்லியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பரவலான பணவீக்கம் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளின் பற்றாக்குறை நாடளாவிய ரீதியிலான போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவால் வழங்கப்பட்ட 500 மில்லியன் டொலர் கடனில், 400 மில்லியன் டொலர்களை ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்துள்ளது.

மீதமுள்ள நிதியிலிருந்து இரண்டு எரிபொருளுக்கான கட்டணம் செலுத்தப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஜூன் வரை கொள்முதல் திட்டங்களை செய்துள்ளதாக தெரிவிக்கும் அமைச்சர், பணம் செலுத்துவதற்கு போதுமான அந்நிய செலாவணியை எவ்வாறு கொண்டுவருவதென்று கண்டறிய வேண்டும் என்றார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap