தடுப்பூசி போடத மற்றும் முழுமையாக தடுப்பூசி செலுத்தாத பயணிகளுக்கு நாட்டுக்கு வந்த பின்னர் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனை கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.
குறித்த பயணிகள் அனைவருக்கும் பி.சி.ஆர். சோதனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இலங்கைக்கு வருவதற்கு முன்னர் பயணிகள் புறப்பட்ட 72 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரபிட் ஆன்டிஜென் சோதனைகளைத் தெரிவுசெய்யும் பயணிகள் புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பு அதைச் செய்திருக்க வேண்டும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.