அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று (26) தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் சுதந்திரக் கட்சியின் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று டார்லி வீதியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதேவேளை, அரசியலமைப்புத் திருத்தம் குறித்து சுயாதீன நாடளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

மேலும் பிரதமர் தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap