கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளுக்கு மாத்திரம் இன்று (07) எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர்கள் பிற்பகலில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட 159 விநியோகஸ்தர்களுக்கு 16 ஆயிரத்து 987 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் விநியோகஸ்தர்களின் விபரங்களை www.litrogas.com இன் ஊடாக பார்வையிடுமாறு லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.