சனத் நிஷாந்த, ரமேஷ் பத்திரன, நிமல் லன்சா, துஷார சஞ்சீவவின் வீடுகள் பொதுமக்களால் தாக்கப்பட்டுள்ளதாக இதுவரை அறியக்கிடைத்துள்ளது.
குருநாகலை மாவட்ட உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் இல்லம் மற்றும் அலுவலகம் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.
குருநாகல் நகர முதல்வர் துஷார சஞ்சீவவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள அதேவேளை மொரட்டுவ மேயர் சமன்லால் பெர்னாண்டோவின் இல்லம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்தவின் வீட்டுக்கும் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டள்ளது.
இதேவேளை முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரனவின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.