மே (09) அன்று கோட்டகோகம மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் சி.ஐ.டி.யால் இன்று புதன்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொரட்டுவை மேயர் சமன் லால் பெர்னாண்டோ, சீதாவக்கை பிரதேச சபையின் தலைவர் ஜயந்த ரோஹன, களனி பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுள பிரசன்ன ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை ‘நவ சிங்ஹலே’ அமைப்பினுடைய தலைவர் டான் பிரியசாத் இன்றும் மாநகரை சபை ஊழியர்கள் இருவர் நேற்றும் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap