சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோருக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
அமைதிப் போராட்டத் தளங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாக்குதலுடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டிருந்தார். (CBC TAMIL)