இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

முன்னதாக ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவில்லை என்றும் அதில் அமைச்சுப்பதவிகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் மைத்திரிபால சிறிசேன நேற்று அறிவித்திருந்தார்.

அந்தவகையில் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தீர்மானத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் நேற்று அறிவித்திருந்தார்.

தேர்தல் மூலம் மட்டுமே பிரதமர் பதவிக்கு ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, கடிதம் எழுதியுள்ளார்.

இதேவேளை ஆளும்கட்சியினான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்ரமசிங்கவிக்ரு தமது ஆதரவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்த்த்க்கது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap