இரு கோரிக்கைகளை நிறைவேற்றினால் ஐக்கிய மக்கள் சக்திகொண்டுவரும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவோம் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் ஐக்கிய மக்கள் சக்திக்கு இரண்டு மாற்று வழிகள் இருப்பதாக கூறினார்.
அதன்படி நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்படும் போது சர்வகட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இணைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இல்லாவிட்டால் அரசாங்கம் பதவி விலகும் போது ஆட்சியை பொறுப்பேற்க வேண்டும் என இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.