காலி முகத்திடலில் போராட்டம் நடத்தியவர்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க துரோகம் இழைத்துள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இன்று கடுமையாக சாடியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், ரணில் விக்ரமசிங்க 6ஆவது தடவையாக இலங்கையின் பிரதமராக வருவதற்காக ஒட்டுமொத்த தேசத்திற்கும் துரோகம் இழைத்துள்ளார் என கூறினார்.

ஜனாதிபதி இராஜினாமா செய்யவிருந்த நேரத்தில், ரணில் விக்ரமசிங்க எவ்வித நிபந்தனையுமின்றி தனது சொந்தக் கட்சியினருக்குத் தெரியாமல் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார் என்றும் சாடினார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யும் வரையில் ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் அரசாங்கத்தில் இணைவதற்கான கோரிக்கைகளை நிராகரித்திருந்த நிலையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் பின்னனியில் பிரதமராக பதவியேற்று, கடந்த 1 வருடமாக எதிர்கட்சியினர் கூறிய அதே விடயங்களையே ரணில் விக்கிரமசிங்க தற்போது கூறுவதாகவும் இரா. சாணக்கியன் குற்றம் சாட்டினார்.

3 வாரங்களில் எரிவாயு தட்டுப்பாடு, ஒரு மாதத்தில் பெட்ரோல் தட்டுப்பாடு, இன்னும் ஓரிரு மாதங்களில் மருந்து தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவேன் என பிரதமர் கூறுவார் என்றே அனைவரும் எதிர்பார்த்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பேரம் பேசி ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியை ஏற்றிருக்க வேண்டும் ஆனால் அதற்கு பதிலாக ராஜபக்ஷ குடும்பத்தை காப்பாற்றவே பிரதமர் பதவியை அவர் ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.

பிரதமராக நியமிக்க ராஜபக்ச குடும்பத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இரா. சாணக்கியன் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

பதுங்கு குழிக்குள் இருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வெளியே கொண்டு வருவதே செய்த முதல் ஒப்பந்தம் என்றும் திருகோணமலையில் மறைத்து இருந்த மஹிந்த ராஜபக்ஷ அவரது மகன் நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு உதவுவது இரண்டாவது ஒப்பந்தம் என கூறினார்.

அத்தோடு புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பின் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவுக்கு உதவினீர்கள் என்றும் இரா.சாணக்கியன் கடுமையாக சாட்டியிருந்தார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap