ஜனாதிபதி கோட்டாவை பதவி விலகுமாறு ஆளும்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை !

பதவியை இராஜினாமா செய்யுமாறு ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு அனைத்துக் கட்சி அரசாங்கத்தையும் புதிய பிரதமரையும் நியமிக்குமாறு ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டலஸ் அழகப்பெரும, சன்ன ஜயசுமண, நாலக கொடஹேவா உள்ளிட்ட 16 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.