Several rounds of gunfire have been heard at Angod

UPDATE அங்கொட சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஜீப்பிற்கு தீவைக்க குழுவொன்று முயற்சித்ததை அடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது

இந்நிலையில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

NEWS கொழும்பு மாவட்டம் அங்கொட பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் காயம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தஹாடர்பாக இதுவரை எமக்கு தகவல் கிடைக்கவில்லை.

குறித்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதை முல்லேரியாவ பொலிஸ் நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap