திருமணத்துக்கு முன்பு காதல் ஏதேனும் இருந்திருந்தால், அந்த காதலருடன் பிரிவு ஏற்பட்டிருந்தால் அது பற்றி கணவரிடம் சொல்லாமல் இருப்பது தான் நல்லது.

திருமணமான புதிதில் இருவரும் ஒருவருக்கொருவர் சுவாரஸ்யமாக பேசிக்கொள்ள வேண்டும் என்று நினைத்து ஆண்கள் தங்களுடைய பழைய காதலைப் பற்றி சொல்ல ஆரம்பிப்பார்கள். அதேபோல தன் மனைவியிடமும் கேட்பார்கள்.

நீங்களும் உணர்ச்சி வசப்பட்டு உங்களுடைய பழைய காதலை சொல்லக் கூடாது. அது பிற்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து விடும். ஆண்களுக்கே உரிய ஈகோ தலைதூக்கிப் பார்க்க முடியும்.

திருமணத்துக்கு முன்பாக நீங்கள் யாரையாவது காதலித்து இருக்கலாம். ஏதாவது சூழ்நிலை சந்தர்ப்பத்தால் பிரிய நேரிட்டிருக்கும். ஆனால் உங்களுடைய திருமணத்துக்கு பின் நீங்கள் மீண்டும் பழைய காதலரை சந்தித்திருக்கலாம்.

இருவரும் தங்களுடைய நட்பை தொடர விரும்பி, நண்பர்களாகவும் இருக்கலாம். ஆனால் என்னுடைய நெருங்கிய நண்பராக இருக்கும் இவர், என்னுடைய பழைய காதலர் என்று உங்கள் கணவரிடம் சொல்லி விடாதீர்கள். அது உங்கள் நட்பிலும் சரி, கணவன், மனைவி உறவுக்குள்ளும் நிறைய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

கணவன் – மனைவிக்குள் உடல் சார்ந்த கவர்ச்சி என்பது மிக முக்கியம். உடல் சார்ந்த கவர்ச்சி தான் இருவரையும் இன்னும் கூடுதலான அந்நியோன்யத்தை ஏற்படுத்தும்.

பெண்களுக்கு தங்களுடைய கணவர் ஃபிட்டாகவும் கவர்ச்சியான உடலமைப்புடனும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதை புரிந்து கொள்ளாமல், இருந்தால் அதை மறைமுகமாகப் புரிய வைத்து அவரை மாற்ற முயற்சிக்க வேண்டுமே தவிர, நேரடியாக உங்கள் துணையிடம் உங்கள் உடலையோ அல்லது சில பாகங்களையோ எனக்கு பிடிக்கவில்லை என்று வெளிப்படையாகச் சொல்லி விடாதீர்கள்.

ஆண்களுக்கு அது மிகப்பெரிய ஈகோ பிரச்சினையாக மாற வாய்ப்பு உண்டு. அதனாலேயே நீங்கள் இயல்பாய் சொன்ன விஷயங்கள் விபரீதமான விஷயமாகக் கூட மாறலாம். அதேபோல இருவருக்குமான நெருக்கமும் குறைய ஆரம்பித்து விடும்.

ஆண், பெண் இருவருமே தங்களுடைய மனதுக்குள் சில ஆபாசமான விஷயங்களை நினைப்பார்கள். மனதுக்குள் ஆபாசங்கள் தோன்றுவது மனித இயல்பு தான்.

உங்களுடைய அந்தரங்கள் விருப்பங்கள் மற்றும் ஆபாசமான எண்ணங்கள் சிலவற்றை கணவராகவே இருந்தாலும் அதை சொல்லாமல் இருப்பது தான் நல்லது.

ஆண்களும் குறிப்பிட்ட எல்லைக்கு மேல் தன்னுடைய ஆபாசமான எண்ணங்களை மனைவியிடம் வெளிப்படுத்த மாட்டார்கள். குறிப்பாக பெண்கள் இந்த மாதிரியான விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் போது அவர் உங்களை தவறாக நினைக்கவும் வாய்ப்பு உண்டு.

உங்களுடைய கணவரின் குடும்பத்தையோ அவர்களுடைய குடும்பத்தையோ, குறிப்பாக கணவரின் அம்மாவை (மாமியார்) பிடிக்கவில்லை என்றால் அதை ஒருபோதும் உங்களுடைய கணவரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

எந்த ஆணுக்குமே தன்னுடைய குடும்பத்தையோ குறிப்பாக தன்னுடைய அம்மாவையோ தவறாக பேசும் எவரையும் பிடிக்காது.

நீங்கள் உங்களுடைய கணவரிடம் வெளிப்படையாக இருப்பது என்னவோ உண்மை தான். ஆனால் அதற்காக உங்கடைய அலுவலகத்தில், நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் நடக்கும் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதோ, அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் பற்றிய சொந்த விஷயங்களையோ அல்லது அலுவலகம் சார்ந்த பிரச்சினைகளையோ உங்கள் கணவரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap