மார்ச் 20 ஆம் திகதிக்கு பின்னர் சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் இன்று (27) ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் சரக்கு இறக்கப்படும் நிலையில், ஆறு நாட்களில் எரிபொருள் உற்பத்தி ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
மே 26 நிலவரப்படி டீசல் 23022 மெட்ரிக் தொன், சுப் டீசல் 2588 மெட்ரிக் தொன், 92 பெட் 39968 மெட்ரிக் தொன், 95 பெட் 7112 மெட்ரிக் தொன் மற்றும் ஜெட்டா 1 3578 மெட்ரிக் தொன் கையிருப்பு உள்ளது என கூறினார்.