துரோகமிழைத்துவிட்டார்கள்: ஹரினும் மனுஷவும் கட்சியில் இருந்து நீக்கம்
1 min read
இன்று அமைச்சர்களாக பொறுப்பேற்ற ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை உறுப்பினர்கள் பதவியில் இருந்து நீக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அதற்கான கடிதங்கள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக மனுஷ நாணயக்காரவும், சுற்றுலா மற்றும் காணி அமைச்சராக ஹரின் பெர்னாண்டோவும் இன்று காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.