ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் இடைக்கால அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

எனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஐக்கிய மக்கள் சக்தி இணையாது என்றும் அவர் கூறினார்.

இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இதேநேரம் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க பதவிகளை ஏற்குமாறு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap