இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான ஜனாதிபதியின் அழைப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஏற்றுக்கொண்டார்.
நிபந்தனைகளுக்கு உட்பட்டு புதிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி தயாராக இருப்பதாக அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முதலாவது நிபந்தனை, இரண்டு வாரங்களுக்குள் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் 19வது அரசியலமைப்பு திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் இரண்டாவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்ட காலத்திற்குள் பதவி விலக வேண்டும்.
மூன்றாவது நிபந்தனை, அரசியலமைப்பின் 21வது திருத்தத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு ஜனாதிபதி அனைத்து அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்பட வேண்டும்.
நான்காவது, மேற்கூறிய அரசியலமைப்பு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி, சட்டத்தின் ஆட்சியை நிறுவி, மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குத் திரும்பச் செய்து, புதிய நிலையான அரசாங்கத்தைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பை மக்களுக்கு வழங்க ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.
பொருளாதாரத்தின் வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதற்கும் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதற்கும் நிலையான வேலைத்திட்டம் தன்னிடம் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் பதவிப்பிரமாணம் மற்றும் குறித்த புதிய அரசாங்கத்தின் காலம் தொடர்பிலான கலந்துரையாடலுக்கு தாம் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.