வன்முறைகளை தவிர்த்து அறவழிப் போராட்டத்தைத் தொடர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கேட்டுக்கொண்டுள்ளார்.
இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் வகையில் வன்முறை சம்பவங்கள் இடம்பெறுவதற்கு இடமளிக்க கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வன்முறையை தூண்டிவிட்டு அதன் ஊடாக சாதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் மக்கள் இது குறித்து அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
நீதிக்காகவும், ஜனநாயக ஆட்சிக்காகவும் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்தி வருபவர்களிடம் சந்திரிக்கா குமாரதுங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.