இலங்கை மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று (18) 10 சதங்களால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 364.63 ரூபாயாகவும், கொள்வனவு விலை 354.66 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.