எட்டு புதிய அமைச்சர்களுக்கான நியமனங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (23) காலை வழங்கப்பட்டது.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அதன்படி நீர்ப்பாசன, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ரொஷான் ரணசிங்க பதவியேற்றுள்ளார்.