2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றுடன் நிறைவடைந்த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு முன்னதாக வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் உறுதியளிக்கிறது.
சாதாரண தரப் பரீட்சைக்கான வினாத்தாள் திருத்தும் முதற்கட்ட பணிகள் ஜூன் 17ஆம் திகதி ஆரம்பமாகி ஜூன் 26ஆம் திகதி நிறைவடையும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார்.
இரண்டாம் கட்டம் ஜூன் 30 ஆம் திகதி தொடங்கி ஜூலை 9 ஆம் திகதி முடிவடையும் என்றும் இதற்காக 32,368 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.