பாரிய பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்னர் நடவடிக்கை எடுங்கள் : ரஷ்யாவுடனான பிரச்சினை குறித்து தினேஷ்
1 min read
ரஷ்ய ‘ஏரோஃப்ளோட்’ விமானம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண விரைவாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ‘ஏரோஃப்ளோட்’ விமானம் ஒன்று இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்புக்கான விமான சேவைகளை அந்நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது.
எனவே இரு நாடுகளுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையில் பாரிய பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரகபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன மேற்கொண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.